லட்சுமி குபேர ஹோமம்

லட்சுமி குபேர ஹோமம்

சம்பாதிப்பது ஒரு கலை என்றால், அதைத் தக்க வைத்துக்கொள்ள நல்ல யோகமும் வேண்டும் என்கின்றன நம் சாஸ்திரங்கள். கோடி கோடியாக வைத்திருப்பவர் எதையும் அனுபவிக்க முடியாது, ஒன்றுமே இல்லாத அன்றாடங்காய்ச்சி ஆரோக்கியமாக கிடைத்தை எல்லாம் அனுபவிப்பான். இதற்கெல்லாம் காரணம் பூர்வ ஜன்ம வினைகள் என்று சொல்வதுண்டு. அந்த வினைகளை தகுந்த வழிபாடுகள் செய்து போக்கிக் கொள்ளலாம் என்றும் நமது சாஸ்திரங்களே சொல்கின்றன.

 

அதிலும் திருமகளைத் தக்க வைத்துக் கொள்வது மிக மிகச் சிரமமான விஷயம் என்கின்றன புனித நூல்கள். திருமகளின் அருளைப் பெற்றுவிட்டால் அவரைத்தேடி நவநிதிகளும் வரும். வாழ்வின் சகல சௌபாக்கியங்களும் அவருக்குக் கூடிவரும். எல்லாவித தீமைகளும் தோஷங்களும் நீங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. அப்படி திருமகளைத் திருப்திப்படுத்தும் வழிபாடுகளில் முக்கியமானது ஸ்ரீ லட்சுமி குபேர ஹோமம்.
மகாலட்சுமியையும் குபேரனையும் ஒரு சேர ஆராதிக்கும் வழிபாடே லட்சுமி குபேர ஹோமம். ஸ்ரீ லட்சுமி குபேரனுக்குச் செய்யப்படும் ஹோமங்கள் நவ நிதிகளையும் அள்ளித்தரும் ஆற்றல் கொண்டவை.

தொடர்பு கொள்ளுங்கள்

டி-1-93 ஷிவ் துர்கா விஹார் லக்கர்பூர், சூரஜ்குண்ட், ஃபரிதாபாத், ஹரியானா – 121009 +91 93442 04179

ஒரு சிறு குறிப்பு

வேத சடங்குகள், மத சடங்குகள், வாஸ்து யாகங்கள் மற்றும் இது போன்ற பல வேத மற்றும் இந்து பூஜை சேவைகளைப் பெறுவதற்கு யாஜனம் வலைத்தளத்தில் முன்பதிவு செய்து, அனைத்து வித சம்ஹ்காரங்களும் வேத முறைப்படி சிறப்பாக செய்ய அணுகவும்.

Edit Template