கும்பாபிஷேகங்கள்

குடமுழுக்கு / கும்பாபிஷேகம்

குடமுழுக்கு / கும்பாபிஷேகம் ஒவ்வொரு இந்து கோவிலிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஒரு முக்கிய சடங்காகும்.

இதன்மூலம் அந்த கோவில் உள்ளிருக்கும் கடவுள் சிலைகளுக்கு தெய்வீகத்தன்மை புதுப்பிக்கப்படுகிறது. குடத்தில் நீர் நிரப்பி புனித ஆறுகளின் நீராக உருவகித்து மந்திரங்களினால் தெய்வத்தன்மை ஏற்றப்பட்ட நீரினால் சிலைகளும் கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கலசங்களும் நீராட்டப்படுவதால் இது குடமுழுக்கு என்று அழைக்கப்படுகிறது.

கோபுர கலசங்களும் தெய்வத்தன்மை பெறுவதால் ஒருவர் கோவிலுக்குள் செல்லாமலே கோபுர தரிசனம் மூலமே கடவுளின் அருளைப் பெற இயலும் என்பது இறையாளர்களின் நம்பிக்கை.

கும்பாபிஷேகத்தின் வகைகள்

 

  • ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவது.
  • அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.
  • புனராவர்த்தம் – கருவறை, பிரகாரம், கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றைப் புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.
  • அந்தரிதம் – கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்துவிடின் அதன் பொருட்டு செய்யப்படும் சாந்தி.

அணைத்து விதமான குடமுழுக்கு / கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகளுக்கு எங்களை இன்றே தொடர்புகொள்ளவும்

தொடர்பு கொள்ளுங்கள்

டி-1-93 ஷிவ் துர்கா விஹார் லக்கர்பூர், சூரஜ்குண்ட், ஃபரிதாபாத், ஹரியானா – 121009 +91 93442 04179

ஒரு சிறு குறிப்பு

வேத சடங்குகள், மத சடங்குகள், வாஸ்து யாகங்கள் மற்றும் இது போன்ற பல வேத மற்றும் இந்து பூஜை சேவைகளைப் பெறுவதற்கு யாஜனம் வலைத்தளத்தில் முன்பதிவு செய்து, அனைத்து வித சம்ஹ்காரங்களும் வேத முறைப்படி சிறப்பாக செய்ய அணுகவும்.

Edit Template