அஷ்டதிக் பாலக ஹோமம்

அஷ்டதிக் பாலக ஹோமம்
எந்தவொரு கடவுளை நினைத்தும் வேண்டியும் பூஜைகள் செய்வோம். ஹோமங்கள் செய்வோம். அந்த பூஜையின் போது முக்கியமாக வழிபடுபவர்களில் அஷ்டதிக் பாலகர்களும் உண்டு.
திக் என்றால் திசை. அஷ்டம் என்றால் எட்டு. அமாவாசையில் இருந்தும் பெளர்ணமியில் இருந்தும் வருகிற எட்டாம் நாள் அஷ்டமி திதி என்று அதனால்தான் சொல்கிறோம். அஷ்ட திக் என்றால், எட்டுத் திசை என்று அர்த்தம். அஷ்ட திக் பாலகர்கள் என்றால், எட்டுத்திசைக்குமான நாயகர்கள், தலைவர்கள், பாதுகாவலர்கள் என்று அர்த்தம்.
இந்திரன், அக்னி தேவன், எமதருமன், வருண பகவான், நிருதி பகவான், வாயு பகவான், குபேரன், ஈசானன் ஆகிய எட்டுபேரும் அஷ்ட திக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையின் நாயகர்கள். அந்தந்த திசைக்கு அதிபதிகள்.
அஷ்டதிக் பாலகர்களைத் துதித்து செய்யப்படும் இந்த ஹோமத்தினால் எல்லா நிறைவுகளையும் பெறலாம்.
விரைவு இணைப்புகள்
தொடர்பு கொள்ளுங்கள்
ஒரு சிறு குறிப்பு
வேத சடங்குகள், மத சடங்குகள், வாஸ்து யாகங்கள் மற்றும் இது போன்ற பல வேத மற்றும் இந்து பூஜை சேவைகளைப் பெறுவதற்கு யாஜனம் வலைத்தளத்தில் முன்பதிவு செய்து, அனைத்து வித சம்ஹ்காரங்களும் வேத முறைப்படி சிறப்பாக செய்ய அணுகவும்.