நவக்கிரக ஹோமம்

நவக்கிரக ஹோமம்

நம்முடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவது நவகிரகங்களே என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நம்முடைய ஜாதகத்தில் கிரகங்களின் அமைவைப் பொறுத்தே நம்முடைய இன்ப துன்பங்கள் அமையும் என்பதை நாம் அறிவோம்.

 

அதேபோல் நாம் பெறும் யோகங்கள் வெற்றி-தோல்விகள் அனைத்தையும் நிர்ணயிப்பது கிரகங்களே. ஒன்பது கிரகங்களையும் திருப்தி செய்து அவற்றை வசப்படுத்தும் சிறப்பு வழிபாடே நவகிரக ஹோமம் எனப்படும். இதை ஆண்டுக்கு ஒருமுறையாவது செய்ய வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு.

 

இந்த நவகிரக ஹோமத்தில் கலந்து கொள்வதால், கிரக தோஷங்கள் அகலும். மேலும் காரிய ஸித்தி, நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி, வெற்றிகள், அச்சமற்ற வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை.
ஆரோக்கியமான வாழ்வைப் பெற சூரியனின் அருள் வேண்டும். அதேபோல நீடித்த வெற்றிக்கு சந்திரன் அருள் வேண்டும்.
விரயமற்ற வாழ்க்கை பெற செவ்வாய் அருள் வேண்டும்.

 

அறிவான கலை இலக்கியங்களில் தேர்ச்சி பெற புதன் அருள் வேண்டும்.
ஞானமும் கல்வியும் பெற குருவும், செல்வம், சுகபோக வாழ்வு பெற சுக்கிரனும், ஒழுக்கம் நிம்மதியான வாழ்வு பெற சனீஸ்வரனும், பலமான வாழ்வு பெற ராகுவும், வளமான வாழ்வு பெற கேதுவும் துணை செய்ய வேண்டும் என நமது பாரம்பரிய ஜோதிட நூல்கள் எடுத்துரைக்கின்றன.

 

இந்த ஒன்பது கிரகங்களின் பேரருளைப் பெற்று தரும் ஒரே வழிபாடு நவகிரக ஹோமம் தான் ஒரே வழி என்கின்றன ஞானநூல்கள்.

தொடர்பு கொள்ளுங்கள்

டி-1-93 ஷிவ் துர்கா விஹார் லக்கர்பூர், சூரஜ்குண்ட், ஃபரிதாபாத், ஹரியானா – 121009 +91 93442 04179

ஒரு சிறு குறிப்பு

வேத சடங்குகள், மத சடங்குகள், வாஸ்து யாகங்கள் மற்றும் இது போன்ற பல வேத மற்றும் இந்து பூஜை சேவைகளைப் பெறுவதற்கு யாஜனம் வலைத்தளத்தில் முன்பதிவு செய்து, அனைத்து வித சம்ஹ்காரங்களும் வேத முறைப்படி சிறப்பாக செய்ய அணுகவும்.

Edit Template