சுதர்சன ஹோமம்

சுதர்சன ஹோமம்
உண்மையான பக்தர்களுக்கு சதாசர்வ காலமும் அபயம் அளிக்கும் ஸ்ரீசுதர்சன சக்கரம், துஷ்டர்களை வதம் செய்யக் கூடியது. பக்தியையும் தர்மத்தையும் நிலை நாட்டும் ஆற்றல், அதர்மத்தின் செருக்கை அடக்கும் வல்லமையைக் கொண்டவர் ஸ்ரீசுதர்சனர் சுவாமி ஆவார்.
சமய வழிபாட்டு நூல்கள் ஸ்ரீசுதர்சனரை போற்றுகின்றன! ‘ஆயிரம் கைகளுடன், சிவந்த கண்கள் கொண்டவரும், ஆயிரம் சூரிய ஜுவாலையை அழகான மணிகள் போல் அணிந்தவரும், பஞ்சபூதங்களின் மனோரூபத்தைப் பெற்றவரும், பகவானை மனத்தளவில் நினைத்த மாத்திரத்தில் வரக் கூடியவரும், சூரிய- சந்திரன்- அக்னி போன்று நமக்கு சக்தி கொடுப்பவரும், பக்தர்களுக்கு எப்போதும் சௌக்கியம் தருபவருமான ஸ்ரீசுதர்சனரை வணங்குகிறேன்.
ஞானம்- பலம்- ஐஸ்வர்யம்- வீர்யம் போன்றவற்றை அருள்பவரும், மந்திரங்களில் ராஜா போல் விளங்குபவரும், சத்தியத்தைக் காப்பாற்றுபவரும், விஷ்ணு பக்தியைப் பரப்பக் கூடியவரும் ஆகிய ரிஷி நாராயணனை வணங்குகிறேன்’ – என்று வழிபாட்டு நூல்கள் போற்றுவதிலிருந்து ஸ்ரீசுதர்சனரின் தேஜோ ரூபத்தை (சக்கரத்தின் தன்மையை) அறியலாம்.
இத்தகு மகிமைகள் கொண்ட ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்கி, அவரின் பேரருளைப் பெறும் வகையில் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பாகும்.
ஹோமங்களில் மிகுந்த வல்லமை பெற்றது மகா ஸ்ரீசுதர்சன ஹோமம். நம் வீடுகளில் நடக்கும் கிரகப்பிரவேசம், ஆயுஷ்ய ஹோமம் போன்ற எந்த ஒரு விசேஷத்தின்போதும் குடும்ப ஐஸ்வர்யம் கருதி, ஸ்ரீசுதர்சன ஹோமத்தையும் சேர்த்தே நடத்தி வைப்பது உண்டு.
அற்புதமான இந்த ஹோமத்தில் ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரம், காயத்ரி மந்திரம் ஆகியவற்றைச் சொல்லி ஹோமம் செய்யப்படுகிறது.
எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயசம் ஆகிய ஒவ்வொன்றையும் கொண்டு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் உரிய மந்திரத்தை உளமார உச்சரித்து ஜபிக்க வேண்டும் என்கின்றன ஞான நூல்கள்.
மகா சுதர்சன ஹோமத்தின்போது, சக்தி வாய்ந்த பல மந்திரங்கள் சொல்லி ஹோமப் பொருட்களை அக்னி பகவானுக்குச் சமர்ப்பிக் கிறோம். பொதுவாக இந்த ஹோமத்தில் ஸ்ரீசுதர்சன சடாக்ஷரி, ஸ்ரீசுதர்சன காயத்ரீ, ஸ்ரீசுதர்சன மாலா மந்திரம், ஸ்ரீநரசிம்ம மந்திரம், ஸ்ரீநரசிம்ம காயத்ரி, ஸ்ரீவிஷ்ணு காயத்ரி, ஸ்ரீலட்சுமி காயத்ரி, ஸ்ரீலட்சுமி மந்திரம், ஸ்ரீதன்வந்திரி மந்திரம், பஞ்சஜன்ய காயத்ரி போன்ற பல மந்திரங்களையும் சொல்லிச் செய்வது உண்டு. இதனால் இந்த ஹோமத்தின் பலன் அளவிடற்கரியதாக விளங்குகிறது.
விரைவு இணைப்புகள்
தொடர்பு கொள்ளுங்கள்
ஒரு சிறு குறிப்பு
வேத சடங்குகள், மத சடங்குகள், வாஸ்து யாகங்கள் மற்றும் இது போன்ற பல வேத மற்றும் இந்து பூஜை சேவைகளைப் பெறுவதற்கு யாஜனம் வலைத்தளத்தில் முன்பதிவு செய்து, அனைத்து வித சம்ஹ்காரங்களும் வேத முறைப்படி சிறப்பாக செய்ய அணுகவும்.