அங்குரார்ப்பணம்

அங்குரார்ப்பணம்

அங்குரார்ப்பணம் என்பது கிருஹ்ய சூத்திரங்களில் ஒரு முக்கியமான அம்சம்.

 

நவ தானியங்களை முளை கட்டி ( நெல், கோதுமை, துவரை, பச்சை பயறு, கொண்டை கடலை,மொச்சை, எள்,உழுந்து, கொள்) , அவற்றை விதைப்பது தான் பாலிகை தெளித்தால் அல்லது அங்குரார்ப்பணம் எனப்படும்.

 

திக் பாலகர்கள் (திசை காவலர்கள்) – கிழக்கில் இந்திரன், தெற்கில் யமன், மேற்கில் வர்ணன், வடக்கில் சோமன் ,நடுவில் பிரம்மா – என்று ஐந்து மண் கிண்ணங்களில் , மண் கிராபி – அவர்களை ஆவாஹனம் செய்து, இந்த விதை கலவையில் பாலை கலந்து, எஜமானன் முதலில் தெளிக்க , பிறகு சுமங்கலிகளை விட்டு தெளிக்க வைப்பார்கள்.

 

அந்த பாலிகையை, 5 -7 காலி, மாலி வழிபட்டு, பிறகு ஆற்றில் கரைத்து விட வேண்டும்.

 

அந்த தேவதைகளின் சக்தியால் விதைகள் வளருவதை கண்டு மகிழ்ச்சி உற்று , அணைத்து சுப காரியங்களுக்கும் பூர்வாங்கமாக செய்யப்பெறும் ஒரு கர்மா தான் இந்த அங்குரார்ப்பணம்.

 

அங்குரம் என்றால் விடை அல்லது முளை என்று பொருள். அர்ப்பணம் என்றால் சமர்ப்பித்தல் என்று பொருள் படும்.

தொடர்பு கொள்ளுங்கள்

டி-1-93 ஷிவ் துர்கா விஹார் லக்கர்பூர், சூரஜ்குண்ட், ஃபரிதாபாத், ஹரியானா – 121009 +91 93442 04179

ஒரு சிறு குறிப்பு

வேத சடங்குகள், மத சடங்குகள், வாஸ்து யாகங்கள் மற்றும் இது போன்ற பல வேத மற்றும் இந்து பூஜை சேவைகளைப் பெறுவதற்கு யாஜனம் வலைத்தளத்தில் முன்பதிவு செய்து, அனைத்து வித சம்ஹ்காரங்களும் வேத முறைப்படி சிறப்பாக செய்ய அணுகவும்.

Edit Template