ஆயுஷ்ய ஹோமம்

ஆயுஷ்ய ஹோமம்
ஆயுஷ்ய ஹோமம் என்பது நமது ஆயுளை நீட்டிக்க வேண்டி வருடா வருடம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வழிபாடு ஆகும்! ஒவ்வொரு ஆண்டும் இந்த ஹோமத்தை முறையாகச் செய்து ஸ்வாமிக்கு நன்றி செலுத்துகிறவர்கள் இறைவனின் நினைப்பில் எப்போதும் இருக்கிறார்கள்; அவர்களை காலன் அணுகமாட்டான் என்கின்றன பண்டைய ஞானநூல்கள்.
ஒரு குழந்தையின் பெயரில் செய்யப்படும் முதல் ஹோமம் ஆயுஷ் ஹோமம். குழந்தை பிறந்த முதல் ஒரு வருடத்தில் அதைக் காக்கும் பொறுப்பை கடவுள் ஏற்பார். அதுவே முதல் வயது முடிந்து அடுத்த வருஷம் ஆரம்பமாவதை ‘அப்த பூர்த்தி’ என்கிறோம். இந்த அப்த பூர்த்தியில்தான் ஆயுஷ் ஹோமத்தைச் செய்ய வேண்டும். உங்கள் குழந்தை நீண்ட ஆயுளையும் நீடித்த ஆரோக்கியத்தையும் பெற இந்த ஹோமம் மிக அவசியம் என்கிறார்கள் நன்று அறிந்த பெரியோர்கள்.
ஆயுஷ் ஹோமத்தைத் தொடங்கும்போது முதலில் தெய்வஅனுக்ரஹத்தை ஆசீர்வாதத்தை வேண்டி முதலில் அனுக்ஞையைச் செய்ய வேண்டும். அடுத்தது விக்னேஸ்வர பூஜை. பிறகு இந்த ஹோமத்தை எதற்காக யாருக்காகச் செய்யப் போகிறோம் என்பதை விளக்கும் சங்கல்பம் பூஜை. வருணன், ஆயுஷ் தேவதை, மிருத்யுஞ்சய ருத்ரன், பஞ்ச சாத்குன்ய தேவதைகள், நட்சத்திர தேவதைகள் ஆகியோரை வணங்கி ஆவாகனம் செய்யவேண்டும்.
விரைவு இணைப்புகள்
தொடர்பு கொள்ளுங்கள்
ஒரு சிறு குறிப்பு
வேத சடங்குகள், மத சடங்குகள், வாஸ்து யாகங்கள் மற்றும் இது போன்ற பல வேத மற்றும் இந்து பூஜை சேவைகளைப் பெறுவதற்கு யாஜனம் வலைத்தளத்தில் முன்பதிவு செய்து, அனைத்து வித சம்ஹ்காரங்களும் வேத முறைப்படி சிறப்பாக செய்ய அணுகவும்.